News March 21, 2025
ரயில்வேயில் 642 பணியிடங்கள்.. ₹1.60 லட்சம் வரை சம்பளம்!

ரயில்வேயில் ஜூனியர் மேனேஜர் உள்பட பல்வேறு பிரிவுகளில் 642 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வேலைப்பிரிவுகளுக்கு ஏற்றபடி கல்வித்தகுதி வேறுபடுகிறது. குறைந்தபட்சம் மாதம் ₹16,000, அதிகபட்சம் ₹1.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 18- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வரும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலதிக தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News March 28, 2025
மதுவுடன் கலந்து குடிப்பதில் எது பெஸ்ட்?

மதுவில் குளிர்பானத்தை கலந்து குடிப்பதால் சுவை நன்றாக இருக்கும். ஆனால், ஆபத்து என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குளிர்பானத்தில் 330 மி. சர்க்கரை இருப்பதால், அதனை மதுவுடன் கலந்து குடிக்கும்போது உடல் பருமன், நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதுவே தண்ணீர் கலந்து அருந்தினால், மதுவால் உடலில் ஏற்படும் நீரிழப்பை தடுக்கலாம். இது உடலில் ஆல்கஹாலின் செறிவைக் குறைக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
News March 28, 2025
இன்று புதிய சாதனை படைப்பாரா ‘கிங்’ கோலி?

ஒவ்வொரு போட்டியிலும் ஒரு புதிய சாதனை படைத்துவரும் விராட் கோலிக்காக, மற்றொரு சாதனை காத்திருக்கிறது. இன்றைய போட்டியில் 55 ரன்கள் எடுத்தால், அவர் டி20 போட்டிகளில் 13,000 ரன்களை கடந்த 5-வது வீரர் ஆவார். இதுவரை, கிறிஸ் கெய்ல் (14,562), அலெக்ஸ் ஹேல்ஸ் (13,610), சோயப் மாலிக்(13,557), பொல்லார்ட் (13,537) மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். இன்றைய போட்டியில் கோலி சாதிப்பாரா?
News March 28, 2025
தெருநாய் தொல்லை… பிரதமரிடம் முறையிட்ட எம்.பி

தெருநாய் தொல்லை குறித்து பிரதமர் மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முறையிட்டுள்ளார். இந்தியாவில் தெருநாய்களின் எண்ணிக்கை 6.2 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், உலகில் நிகழும் ஒட்டுமொத்த ரேபிஸ் மரணங்களில் 36% இந்தியாவில் நிகழ்வதாகவும் பிரதமரிடம் அவர் கூறியுள்ளார். போதுமான நிதி இல்லாததால், நகராட்சிகள் இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றதாகவும் தெரிவித்துள்ளார்.