News March 20, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் கேட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News

News April 7, 2025

புதுகை மாவட்ட அங்கன்வாடி பணி : தமிழக அரசு அறிவிப்பு

image

புதுகை அங்கன்வாடி
டீச்சர் 281 – பேர்.
உதவியாளர் – 196 பேர் பணியிடத்திற்கு
தமிழக அரசு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறதுஇப்பணிகளுக்கென 10 வேலை நாட்ளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 7, 2025

புதுக்கோட்டையில் இன்று உள்ளூர் விடுமுறை

image

புதுக்கோட்டை மாவட்டம் புகழ்பெற்ற நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா இன்று (ஏப்.07) நடைபெற உள்ளது. இதனால் புதுக்கோட்டை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிய உள்ளனர். இதனை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என கலெக்டர் மு. அருணா அறிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)

News April 6, 2025

குழந்தை பாக்கியம் அருளும் நார்த்தமலை முத்துமாரியம்மன்

image

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலையில் இந்த முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நாரதர் இந்த மலையில் வந்து தங்கியதால் இதற்கு நாரதர்மலை என அழைக்கப்பட்டு பின்னர் நார்த்தமலை என்றானது. இங்குள்ள முத்துமாரியம்மனை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் மற்றும் அக்னி கரகம் எடுத்து வழிபட்டால் தீரா நோயும் தீரும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!