News March 20, 2025
சுனிதா அல்ல… விண்வெளியில் அதிக நாள்கள் இருந்தது இவரே!

9 மாத விண்வெளி பயணத்திற்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளார் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். ஆனால், அதிக நாள்கள் விண்வெளியில் இருந்தவர்கள் பட்டியலில் சுனிதாவுக்கு இரண்டாமிடம்தான். முதலில் இருப்பவர் அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெக்கி வைட்சன். இவர் 675 நாள்கள் விண்வெளியில் இருந்து சாதனை படைத்துள்ளார். 608 நாள்கள் விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ், அதற்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
Similar News
News March 28, 2025
பிளே ஆப் செல்லும் அணிகள் எவை? இர்பான் கணிப்பு

ஐ.பி.எல்.2025 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் இதற்கான விடை நமக்கு கிடைத்துவிடும்.
News March 28, 2025
தினமும் காலையில் 2 முட்டை சாப்பிடுங்க

முட்டையில் 13 வகையான வைட்டமின்கள், தாதுக்கள், ஒமேகா-3 போன்றவை நிறைந்துள்ளது. அதனால் எந்த சந்தேகமும் இல்லாமல் தினசரி காலை 2 முட்டையை சாப்பிடுவது நல்லது. முட்டையின் மஞ்சள் கரு நல்ல கண்பார்வையை தரும். மூளை செயல்பாட்டை மேம்படுத்துவது, உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது, குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவது என பல்வேறு நன்மைகளை தரும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.
News March 28, 2025
மன அழுத்தத்தின் அறிகுறிகள்

பொதுவாக ஒருவர் மன அழுத்தத்தில் இருந்தால் சிலருக்கு தற்கொலை எண்ணம் தோன்றும். எனவே ஆரம்ப நிலையிலேயே இதை கண்டறிந்து மருத்துவரிடம் சென்றால் அவரை குணப்படுத்தி விடலாம். மன அழுத்த அறிகுறிகள் இவைதான்.
➤எரிச்சல் உணர்வு
➤அதிக தூக்கமின்மை
➤எதிலும் ஆர்வமின்மை
➤சோர்வு, உடல் எடை மாற்றங்கள்
➤அமைதியின்மை, அதிகம் பேசுதல்,
➤உடல் வலி, பசியிழப்பு