News March 20, 2025
ரூ.10,000க்கு தரமான லேப்டாப் சாத்தியமா? தங்கமணி கேள்வி

ரூ.10,000க்கு எப்படி தரமான மடிக்கணினி வழங்க முடியும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார். 20 லட்சம் லேப்டாப் வாங்க ரூ.2,000 கோடி தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது தொடர்பாக கேள்வி எழுப்பிய அவர், தரமான மடிக்கணினியை வெறும் ரூ.10,000 எப்படி வழங்க முடியும் என வினவினார். இதற்கான நிதியை தமிழக அரசு உயர்த்தும்படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News September 17, 2025
காலக்கெடு நிறைவு: இன்று முதல் ₹5,000 அபராதம்

ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இனி புதிதாக தாக்கல் செய்பவர்களை கால தாமதம் என்றே வருமான வரித்துறை எடுத்துக்கொள்ளும். இனி அபராதம் செலுத்தினால் மட்டுமே ITR தாக்கல் செய்ய முடியும். அதன்படி, ஆண்டு வருமானம் ₹5 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் ₹1,000, ₹5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ₹5,000 செலுத்தி, வரும் டிச.,31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
News September 17, 2025
ஆயுத பூஜைக்கு அருள் தரும் ‘கருப்பு’

ஆயுத பூஜை அன்று ‘கருப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் அன்றே வெளியாக உள்ளதாக கூறப்படுவதால் சூர்யா ரசிகர்கள் செம ஹேப்பியில் இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சாய் அபயங்கர் பின்னணி இசை பணியை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
News September 17, 2025
செப்டம்பர் 17: வரலாற்றில் இன்று

*1879 – பெரியார் ஈ.வெ.ரா பிறந்தநாள். *1908 – ரைட் சகோதரர்களால் ஏவப்பட்ட விமானம் தரையில் மோதியதில், தாமஸ் செல்பிரிட்ச் என்பவர் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார். *1948 – ஐதராபாத் சமஸ்தானம் இந்திய ஒன்றியத்தில் இணைந்தது. *1949 – திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய C.N.அண்ணாதுரை திமுகவை தொடங்கினார். 2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.