News March 20, 2025
ரம்ஜான்- சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வரும் மார்ச் 30- ஆம் தேதி சேலம் வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கும், மறுமார்க்கத்தில், மார்ச் 31- ஆம் தேதி போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 28, 2025
சேலம் வழியாக செல்லும் ரயிலில் முக்கிய மாற்றங்கள்

சேலம் வழியாக செல்லும் சாம்பல்பூர்- ஈரோடு- சாம்பல்பூர் சிறப்பு ரயில்களில் (08311/08312) வரும் ஏப்ரல் முதல் மே 02- ஆம் தேதி வரை மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்றும், ஸ்லீப்பர் பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 28, 2025
ஓரினச் சேர்க்கை மோகம் – வாலிபருக்கு கத்திக்குத்து

மேட்டூரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அதே பகுதியை சேர்ந்த தங்கவேலு என்ற முதியவரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக புருஷோத்தமன் முதியவரைப் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர், புருஷோத்தமனை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை.
News March 28, 2025
சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில் சேவை நீட்டிப்பு

சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் ஈரோடு- நான்டெட் வாராந்திர சிறப்பு ரயில்கள் (07189/ 07190) வரும் மே மாதம் முதல் வாரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.