News March 20, 2025

யூடியூப் பார்த்து எவரெஸ்ட் சிகரம் ஏறிய சிங்கப்பெண்!

image

உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறுவது மலையேற்ற வீரர்களின் கனவு. நன்கு பயிற்சி பெற்றவர்களுக்கே எவரெஸ்டில் ஏறுவது கடினமான ஒன்று. ஆனால், கேரளாவைச் சேர்ந்த வசந்தி(59), யூடியூப் வீடியோக்களை மட்டுமே பார்த்து எவரெஸ்டின் Base Camp-க்கு சென்று அசத்தியுள்ளார். கணவரை இழந்து தையல் தொழில் செய்துவரும் இவர், அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். சாதனை படைத்த வசந்தி நிஜமாகவே சிங்கப் பெண்தான்!

Similar News

News March 28, 2025

டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

image

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு<> ஏற்படுத்தி<<>> தரப்படும்.

News March 28, 2025

பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்

image

எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், 3 அமைச்சர்கள் இன்று பதிலுரை வழங்கவிருப்பதால் இபிஎஸ்ஸை பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு கூறினார். ஆனாலும், துணை முதல்வர் உதயநிதி பேசியபோது தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்.எல்.ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

News March 28, 2025

பிரபல ஹாலிவுட் நடிகர் கிளைவ் ரெவில் காலமானார்

image

ஹாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர் கிளைவ் ரெவில் (94) உடல் நலக்குறைவால் காலமானார். நியூசிலாந்தைச் சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக Dementia (மறதி நோய்) நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தி அனிமேஷன் சீரிஸ் மற்றும் ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்களில் தனது காந்த குரலால் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற கிளைவ் ரெவில் குரல் ஓய்ந்த நிலையில், பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

error: Content is protected !!