News March 20, 2025

தடையை தகர்த்த ஷகிப் அல் ஹசன்

image

சந்தேகத்திற்குரிய வகையில் பந்து வீசுவதாக கூறி, வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் பந்து வீச ஐசிசி தடை விதித்திருந்தது. இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனாலும் துவண்டு போகாத ஷகிப், பல கட்ட முயற்சிக்கு பின் பந்துவீச்சை சரி செய்தார். அதன் தொடர்ச்சியாக 3ஆவது முறை சோதனையில் விதிமுறைக்கு உட்பட்டு பந்து வீசினார். இதனால் அவர் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

Similar News

News March 28, 2025

IPL: டிக்கெட் விலை ரூ.2,343… வரி ரூ.1,657

image

மக்களிடம் வரி மூலம் அரசு எவ்வளவு சுரண்டுகிறது என்று கூறி, நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ள ஐபிஎல் டிக்கெட் தற்போது வைரலாகி வருகிறது. அதில், சென்னையில் டிக்கெட்டின் அடிப்படை ரூ.2,343, பொழுதுபோக்கு வரி(25%) ரூ.781 ஆகியவற்றுடன் ஜிஎஸ்டி 28%-மும் விதிக்கப்படுகிறது. இதில் மத்திய, மாநில அரசுகள் தலா 14% எடுத்துக் கொள்கின்றன. அதாவது ரூ.4,000 கொடுத்து வாங்கும் டிக்கெட்டில் வரி மட்டுமே ரூ.1,657. இது சரி தானா?

News March 28, 2025

Rewind: பேரழிவு நாளாக மாறுகிறதா மார்ச் 28?

image

மார்ச் 28-ம் தேதியில் மட்டும் வெவ்வேறு ஆண்டுகளில் 3 மிகப்பெரிய நிலநடுக்கங்களை உலகம் கண்டுள்ளது. துருக்கியில் 1970 மார்ச் 28 அன்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்(7.1) பதிவானது. இதில், 1086 பேர் உயிரிழந்தனர். இந்தோனோசியாவின் சுமத்ரா தீவுகளில் 2005 மார்ச் 28-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் (8.7), 905 பேரின் உயிரைக் குடித்தது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மியான்மர் நாட்டை உருக்குலையச் செய்துள்ளது.

News March 28, 2025

முட்டை விலை உயர்ந்தது

image

நாமக்கல்லில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு முட்டைக்கு 10 காசு உயர்ந்த நிலையில் இன்று மேலும் 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரித்திருப்பதால் விலை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சில்லறை விற்பனையிலும் முட்டை விலை உயரும் என்பதால், இது மக்களுக்கு கூடுதல் சுமையை அளிக்கும்.

error: Content is protected !!