News March 20, 2025
ஓடத்துறை பாலத்தில் உயிரிழப்பு

மல்லியம்பத்தை சேர்ந்த கண்ணதாசன்(61) இன்று டூவிலரில் ஓடத்துறை பாலத்தில் சென்றபோது நிலை தடுமாறி பாலத்தின் சுவரில் மோதி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே கண்ணதாசன் உயிரிழந்தார். இதையறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 18, 2025
திருச்சி: இந்த எண்களை மிஸ் பண்ணாதீங்க

திருச்சி மாவட்ட பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள்:
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0431-2415031, 2415032, 2415033
▶️குழந்தைகள் உதவி மையம் – 1098
▶️பெண்கள் பாதுகாப்பு உதவி – 181
▶️விபத்து அவசர வாகன உதவி – 102, 108
▶️பேரிடர் கால உதவி – 1077
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.
News April 18, 2025
திருச்சி: கார் மோதி விவசாயி பலி

வையம்பட்டியை அடுத்த சேசலூர் முத்தமடைப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சடையன் (50). இவர் நேற்று காலை தனது தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டு, சேசலூர் அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சடையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 17, 2025
பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் அறிவிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை 21 நாட்களுக்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் தடகளம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி முகாம் நடத்தப்படட உள்ளது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.