News March 20, 2025
சென்னை காவல்துறையில் மாற்றம்

தமிழ்நாடு அரசு மூன்று உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக லக்ஷ்மி, காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 28, 2025
சென்னை மக்களே இந்த WEEK END பிளான் ரெடி

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் தட்சிணசித்ரா என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலை, கட்டிடக்கலை, கலாச்சாரம், கைவினை மற்றும் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் 18 வீடுகள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என தென் மாநிலங்களின் கலைப் பொருட்களை காணலாம். நுழைவு கட்டணம் ரூ.20- 110 மட்டுமே. விசிட் பண்ணுங்க. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News March 28, 2025
IPL: சேப்பாக்கத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்

ஐ.பி.எல். போட்டியையொட்டி, சேப்பாக்கத்தில் இன்றிரவு 7 மணி – 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விக்டோரியா விடுதி சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே வாகனங்களுக்கு அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும். ரத்னா கஃபேவில் இருந்து மெரினா காமராஜர் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்படும்.
News March 28, 2025
நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கம்

சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, இன்று (மார்.28) நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனைக்கும், விமான நிலையத்திற்கு கடைசி மெட்ரோ இயக்கப்படும். ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.