News March 20, 2025
இனி அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்

மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள தமிழக அரசு, தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் இன்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 2025ஆம் ஆண்டு முதல் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்கள், எந்த பள்ளிக்கூடத்தில் (சிபிஎஸ்இ, இன்டர்நேஷனல்) பயின்றாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
Similar News
News March 28, 2025
பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு…!

தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் கூறிய வார்த்தை ட்ரோல் கன்டென்டாக மாறி இருக்கிறது. ‘For men may come and men may go, but I go on for ever’ என்ற ஆங்கிலக் கவிதையைக் கூறிய அவர், அது வில்லியம் ப்ளேக் எழுதியதாகக் குறிப்பிட்டார். ஆனால், அது ஆல்ப்ரெட் லார்ட் டென்னிசன் எழுதிய கவிதையாம். அவர் என்ன பண்ணுவாரு பாவம், எழுதிக் கொடுத்தவர் தப்பா கொடுத்துட்டாருப்பா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
News March 28, 2025
மியான்மர், தாய்லாந்துக்கு இந்தியா உதவிக்கரம்

மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடு, உடைமைகளை இழந்தவர்களுக்கு PM மோடி ஆறுதல் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் தேவையான உதவிகளையும் இந்தியா செய்யத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு நாட்டு வெளியுறவு அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகளைத் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
News March 28, 2025
சபாநாயகரை கைநீட்டி பேசுவது மரபு அல்ல: ஸ்டாலின் காட்டம்

மதுரை உசிலம்பட்டி காவலர் முத்துக்குமரன் கொலை வழக்கு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்க இபிஸ் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார். தொடர்ந்து அதிமுகவினர் <<15912276>>அமளியில் <<>>ஈடுபட, சபாநாயகரை நோக்கி கைநீட்டி பேசுவது மரபல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.