News March 20, 2025

அமேசான், பிளிப்கார்ட் கிடங்குகளில் திடீர் சோதனை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்குகளில் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் BIS முத்திரை இல்லாத உலோக குடிநீர் பாட்டில்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் என ரூ.36 லட்சம் மதிப்பிலான தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 28, 2025

ஆவடி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

ஆவடியில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 27, 2025

திருவள்ளூரில் அரசு சார்பில் நீச்சல் பயிற்சி

image

 திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில்  நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம். நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் 12 நாட்கள் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News March 27, 2025

திருவள்ளூரில் தரிசிக்க வேண்டிய 6 முருகன் கோவில்கள்

image

1.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்,
2.ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணியசுவாமி கோயில்,
3.சிறுவாபுரி முருகன் கோயில்,
4.சென்னீர்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயில்,
5.சென்னை வடதிருச்செந்தூர் முருகன் கோயில்,
6.மணவூர் கிராமம் சுப்பிரமணியசுவாமி கோயில். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!