News March 20, 2025
இராமநாதபுரத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

காற்று வேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக இராம்நாடு மாவட்டத்தில் நாளை முதல் 3 தினங்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகாலை, மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு; மாவட்டத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்பு உள்ளது என இராம்நாடு காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 28, 2025
திருவாடானை பெயர் வரக் காரணம் இது தான்!

திருவாடானை பழைமையான ஊர். இந்தப் பெயர் வரக் காரணமாக சொல்லப்படுவது வருணனின் மகனான வாருணிக்கு துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தினால் ஆட்டுத்தலையுடன் யானை உடலுமாக மாறினான் வாருணி. அவனது சாபம் நீங்க இங்கு உள்ள குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றான். இதனால் ஆடு + ஆணை, திரு எனும் அடைமொழியோடு திருவாடானை ஆனது. முக்திபுரம் அஜகஜபுரம் என பல பெயர்களும் உண்டு. தேவராரபாடல் பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் தலம் உள்ளது.
News March 28, 2025
நண்பகல் ரோந்து அதிகாரிகள் விவரம்

இன்று (28.03.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இராமநாதபுரம்,பரமக்குடி,இராமேஸ்வரம்,கீலக்கரை,கமுதி,திருவாடானை வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ள சமூகவலைதளங்களில் மாவட்டகாவல் தெரிவித்தது.
News March 28, 2025
நார்வே நாட்டில் வேலை என பல கோடி மோசடி

நார்வே நாட்டில் வேலை வாங்கி தருவதாக முகநுால் விளம்பரத்தை பயன்படுத்தி சகுபர் சாதிக் என்பவர் 50க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளார். ஏமாற்றப்பட்டவர்கள் இராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர். அதில், ஒருவர் மனைவியின் தாலியை விற்று ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கட்டினேன் எனக் கூறி அனைவரது பணத்தையும் போலீசார் மீட்டுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். BE AWARE *SHARE