News March 20, 2025
சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து உறுதியானது

இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹலுக்கும், அவரது மனைவி தனஸ்ரீக்கும் மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இருவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால், பிரிவதாக முடிவு செய்து விவாகரத்துக்காக நீதிமன்றத்தை நாடினர். தனஸ்ரீக்கு 4.75 கோடி ஜீவனாம்சம் கொடுக்க சாஹல் ஒப்புக்கொண்ட நிலையில் இருவருக்கும் இன்று நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
Similar News
News September 17, 2025
அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் BJP

BJP மாநில தலைவராக நயினார் தேர்வான பிறகு, அண்ணாமலை ஒதுங்கியே இருந்தார். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என ஆதரவாளர்களும் மனக் குமுறலை வெளிபடுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த BJP நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென அண்ணாமலை இல்லத்திற்கே சென்று அழைத்த B.L.சந்தோஷ், நயினாரின் சுற்றுப்பயணம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட வைத்து, அவருக்கான முக்கியத்துவத்தையும் கொடுத்துள்ளார்.
News September 17, 2025
காலையில் உடல் சுறுசுறுப்பாக இந்த யோகா பண்ணுங்க!

ஹஸ்த பதங்குஸ்தாசனம் செய்வதால், முழங்கால் & முதுகுத்தண்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கும் என கூறப்படுகிறது *தரையில் கை, கால்களை நீட்டி படுக்கவும் *கால்களை ஒன்றாக வைத்து, முட்டியை மடக்காமல் மேலே தூக்கவும் *கை இரண்டையும் விரித்த நிலையில்(படத்தில் உள்ளது போல வைக்கவும்) *இந்த பயிற்சியை செய்ய தொடங்குபவர்கள் முதலில், தலைக்கு ஒரு சிறு தலகாணியும், கால்களை சுவர் மீதும் வைத்து பயிற்சி செய்யலாம். SHARE.
News September 17, 2025
தேர்தல் வேலை செய்யாவிட்டால் ஓய்வெடுங்கள்: மூர்த்தி

தேர்தல் பணிகள் செய்யாத நிர்வாகிகள் வகிக்கும் பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார். அமைச்சரின் இந்த வெளிப்படையான பேச்சு நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.