News March 20, 2025
2025ல் மகிழ்ச்சியான நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?

உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பட்டத்தை இந்த முறையும் பின்லாந்து தக்க வைத்துள்ளது. OXFORD பல்கலை. வெளியிட்ட ‘World Happiness Report 2025’ அறிக்கையின்படி, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் நார்டிக் நாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. 147 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், இந்தியாவை பின்னுக்கு தள்ளி PAK 109வது இடத்திலும், இந்தியா 118வது இடத்திலும் உள்ளது. AFG கடைசி இடத்தில் உள்ளது.
Similar News
News March 28, 2025
3 நாள்களில் சவரனுக்கு ₹1,240 உயர்ந்த தங்கம்

சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி 22 கேரட் ஒரு சவரன் ₹65,480க்கு விற்பனையானது. பின்னர், 26ஆம் தேதி சவரனுக்கு 80 ரூபாயும், நேற்று 320 ரூபாயும் அதிகரித்தது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய உடனே சவரனுக்கு ₹840 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,240 உயர்ந்து ₹66,720க்கு விற்பனையாகிறது.
News March 28, 2025
சாலைகளில் நமாஸ் செய்தால் பாஸ்போர்ட் ரத்து

இஸ்லாமியர்கள் ரம்ஜானை கொண்டாட உள்ள நிலையில் அதிரடி உத்தரவை உ.பி. அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி சாலைகளில் நமாஸ் செய்வதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. மீறுவோர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது. மதக்குருமார்கள் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
News March 28, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹840 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 28) சவரனுக்கு ₹840 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,340க்கும், சவரன் ₹66,720க்கும் விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ₹3 உயர்ந்துள்ளது. இதனால் 1 கிராம் ₹114க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது. கடந்த வார இறுதியில் தங்கம் விலை சரிந்த நிலையில், இந்த வாரம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.