News March 20, 2025
அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் சோதனை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு லட்சக்கணக்கில் மதிப்புள்ள தரமில்லாத பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர். பொருள்களின் சோதிக்கும் மத்திய தர நிர்ணய அதிகாரிகள் இன்று திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில், கொடுவள்ளி பகுதிகளில் உள்ள அமேசான் சேமிப்புக் கிடங்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர்.
Similar News
News March 28, 2025
முதியவர் மயங்கி விழுந்து பரிதாப பலி

திருத்தணி கமலா தியேட்டர் அருகே, 45 வயது மதிக்க ஆண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென சாலையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு உயர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அவரது அடையாளம் தெரியாததால் காவல்துறை விசாரித்து வருகின்றது.
News March 28, 2025
ஆவடி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

ஆவடியில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 27, 2025
திருவள்ளூரில் அரசு சார்பில் நீச்சல் பயிற்சி

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம். நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் 12 நாட்கள் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.