News March 20, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை வழங்கும் முகாம்

மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு 2025-2026 நிதியாண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை மற்றும் புதுப்பித்து வழங்கும் இலவச பயண அட்டை வழங்கப்படவுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 25, 26, 27 ஆகிய 3 தினங்களிலும், உடலியக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர், மற்றும் மனவளர்ச்சிகுன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 28ம் தேதியும் நடைபெற உள்ளது.*ஷேர்
Similar News
News August 23, 2025
மதுரை: அரசு அச்சுத்துறையில் வேலை…ரூ..71,900 சம்பளம்

மதுரை இளைஞர்களே, தமிழக அரசின் அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <
News August 23, 2025
மதுரையில் அரசு மூலம் பரதம், சிலம்பம் கற்க ஆசையா

மதுரையில் கலை பண்பாட்டு துறை நடத்தும் ஓவியம், பரதம் குரலிசை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புகளில் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். இதில் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் சேரலாம். இதற்கு 1 ஆண்டுகான கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோர் 98425 96563 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கம்மியான கட்டணத்துடன் இந்த கலைகளை கற்க அனைவருக்கும் SHARE செய்ங்க.
News August 23, 2025
ரயில் சேவையில் முக்கிய மாற்றம்

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட கொடை ரோடு – சமயநல்லுார் இடையே பராமரிப்பு பணி காரணமாகரயில் சேவையில் கீழ்காணும் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பகுதி ரத்து ஆக.,27 முதல் 30 வரை ஈரோடு – செங்கோட்டை ரயில் (16845), திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். ஆக.,28 முதல் 31 வரை செங்கோட்டை – ஈரோடு ரயில் (16846), திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்.