News March 20, 2025
கூகுளின் புதிய மொபைல் அறிமுகம்!

கூகுள் நிறுவனத்தின் Pixel 9a, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Tensor G4 chipset உடன் இந்த மொபைல் போன் வெளியாவதால் முந்தைய தலைமுறை போன்களை விட, செயல்திறனில் அதிக வேகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8GB RAM 128GB, 256GB சேமிப்பு திறன் கொண்டது. இந்த போனின் ஆரம்ப விலை ₹50,000க்கு ஒரு ரூபாய் குறைவு. அடுத்த மாதம் முதல் ஃபிளப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.
Similar News
News March 23, 2025
வாரம் 70 மணி நேரம் வேலை.. அதில் என்ன தப்பு?

வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என தனது கணவர் நாராயண மூர்த்தி சொன்னதற்கு அவரது மனைவி சுதா மூர்த்தி பதிலளித்துள்ளார். தனது கணவர் அப்படி நேரம் பார்க்காமல் உழைத்ததால்தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை உருவாக்க முடிந்ததாகவும், இன்ஃபோசிஸை இவ்வளவு பெரிய நிறுவனமாக மாற்றிய மந்திரக்கோல் கடின உழைப்புதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்வத்துடன் வேலை செய்தால் நேரம் தெரியாது எனவும் கூறியுள்ளார்.
News March 23, 2025
தந்தை பெரியார் பொன்மொழிகள்

*ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். *முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள். *முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது. அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும். *ஓய்வும், சலிப்பும் தற்கொலைக்கு சமமானது. *கல்வி, சுயமரியாதை, பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
News March 23, 2025
கலவரக்காரர்களிடம் இருந்தே காசு வசூல்

நாக்பூர் கலவரக்காரர்களிடம் இருந்தே, பொதுச் சொத்துக்கள் சேதமடைந்ததற்கான காசு வசூல் செய்யப்படும் என மகாராஷ்டிரா CM பட்னவிஸ் தெரிவித்துள்ளார். பணம் கொடுக்காத பட்சத்தில், அவர்களின் சொத்துக்கள் விற்கப்படும் எனவும், வீடுகளை இடிக்க புல்டோசர்கள் கூட பயன்படுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை இடிக்க இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது கலவரம் வெடித்தது.