News March 20, 2025
ஆண்டுக்கு 15 சிலிண்டர்கள் தான் வாங்க முடியும்!

வீட்டு உபயோகத்திற்கு ஆண்டுக்கு 15 சிலிண்டர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேற்கொண்டு தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்து பெற்றுக் கொள்ளலாம். சிலிண்டர்கள் முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்க்கவே இந்த கட்டுப்பாடு என்றும் 15 சிலிண்டருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு SMSல் தகவல் அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 21, 2025
சீமானுக்கு எதிரான வழக்கு: விவரம் கேட்கும் ஐகோர்ட்

நடிகை விஜயலட்சுமி வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சீமானுக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீதித்துறையை அவமதிக்கும் வகையில் சீமான் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், எழும்பூர் நீதிமன்ற உத்தரவின் விவரத்தைத் தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.
News March 21, 2025
அதிமுகவுக்கு வாழ்த்து சொன்ன ஸ்டாலின்

எம்ஜிஆர் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள் திமுகவினர்; ஆனால், வேறு எங்கோ ஒருவர் சாணக்கிய தந்திரத்தோடு கணக்குப்போட்டு, அதிமுகவை அபகரிக்க முயற்சிப்பதாக பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்தார். உடனே எழுந்து பேசிய தங்கமணி, கூட்டணிக் கணக்கில் நாங்கள் ஏமாற மாட்டோம் என்று பதிலடி கொடுத்தார். இதற்கு பதிலளித்த CM ஸ்டாலின், ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
News March 21, 2025
#Exclusive.. முதல்வர் வெளிநாட்டு பயணச் செலவு விவரம்

மே 7, 2021இல் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து, அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்காக தமிழக அரசு ₹7.12 கோடி செலவிட்டுள்ளது. இதில் பயணம், தங்குமிடம், விசா மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் அடங்கும் என்று RTI மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், அவரது துபாய் பயணச் செலவு குறித்து எந்த தகவலையும் அரசு வெளியிடவில்லை. இதை அரசியல் ரீதியாக விவாதப்பொருளாக மாற்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.