News March 20, 2025

திமுக பிரமுகர் சடலம் மீட்பு

image

திமுக முன்னாள் எம்பியின் உதவியாளர் குமார்(71) காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்திற்காக கொலை செய்து, செஞ்சி அருகே மேல்ஒலக்கூர் கிராமத்தில் புதைத்ததாக தாம்பரம் போலீசாரிடம் மூவரும் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில், இன்று(மார்ச்.21)செஞ்சி தாசில்தார் முன்னிலையில் குமாரின் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News September 23, 2025

விழுப்புரம்: சட்ட சிக்கல் தீர இங்கு போங்க!

image

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் கிருபாபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இந்த கோயில் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக கருதப்படுகிறது. மேலும் இந்தக் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு தரிசிப்பதின் வழியே சட்டரீதியான சிக்கல்கள், குடும்பப் பிரச்சினைகள் அல்லது எந்தவொரு வழக்குகளிலும் வெற்றி பெறலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் கடன் தொல்லை நீங்குவதாக ஐதீகம்.ஷேர்.

News September 23, 2025

விழுப்புரம்: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

image

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> செப்.25க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஏதும் இல்லாமல் மத்திய அரசு வேலை பெற செம்ம வாய்ப்பு. இந்த தகவலை உடனே உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 23, 2025

விழுப்புரம் விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

image

திண்டிவனத்தில், உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, ஸ்ரீசங்கமித்ரா திருமண மண்டபத்தில் நாளை (செப்.24) நடைபெறவுள்ளது. கருத்தரங்களில், வேளாண்மை, மண் வளம், உற்பத்தி உத்திகள், உயிர்ம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் நடைபெறுவதால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!