News March 20, 2025
மஸ்க் ஒரு பைத்தியம்.. பீதியில் டெஸ்லா கார் ஓனர்கள்

அமெரிக்க அரசு ஊழியர்களை தொடர்ந்து வேலையை விட்டு நீக்குவதால், <<15811222>>எலான் மஸ்கின்<<>> டெஸ்லா நிறுவன கார்கள் அந்நாட்டில் தீ வைத்து கொளுத்தப்பட்டு வருகின்றன. இதிலிருந்து தங்கள் கார் தப்பிக்க உரிமையாளர்கள் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தில் மஸ்க் இணையும் முன்னரே கார் வாங்கிவிட்டதாகவும், ஆனால் கண்டிப்பாக மஸ்க் ஒரு பைத்தியம்தான் எனவும் அவர்கள் தங்கள் கார்களில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளனர்.
Similar News
News September 17, 2025
பசங்க ChatGPT யூஸ் பண்ணா, இனி பயப்பட தேவையில்லை

டீன்-ஏஜ் வயதினரின் பாதுகாப்பு மற்றும் பிரைவசியை காக்கும் வகையில் ChatGPT-யில் விரைவில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படும் என்று ஓபன்AI நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக வயது கணிப்பு முறை (13-17, 18+) கொண்டு வரப்படும். பயனருடனான interaction அடிப்படையிலும், தேவையெனில் வயதை உறுதிப்படுத்த ID வெரிபிகேஷனும் செய்யப்படுமாம். தற்கொலை போன்ற தலைப்புகளுக்கு AI பதில் சொல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
என் வாழ்க்கைய கெடுத்துடாதீங்க: VTV கணேஷ்

என்னோட கரியர கெடுத்துடாதீங்க என்று VTV கணேஷ், ‘Kiss’ பட இயக்குநரிடம் குமுறும் வீடியோ வைரலாகிறது. இப்பட தெலுங்கு டிரைலரில், அவருக்கு வேறொருவர் டப்பிங் செய்ததே இதற்கு காரணமாம். தனது முதன்மை மொழியே தெலுங்கு தான், எதற்காக வேறொருவரை டப் செய்ய அனுமதித்தீர்கள் என்று கேட்கிறார். ‘பீஸ்ட்’ படத்தில் தனது ஒரு வசனத்தின் தாக்கத்தால், தெலுங்கு சினிமாவில் 10 படங்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியிருந்தார்.
News September 17, 2025
BREAKING: மகாளய அமாவாசை, விடுமுறை.. ஸ்பெஷல் அறிவிப்பு

மகாளய அமாவாசை, வார விடுமுறையையொட்டி, பொதுமக்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. அதன்படி, செப்.19, 20, 21 ஆகிய தேதிகளில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மொத்தமாக 1055 கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.