News March 20, 2025

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் ஒரு பிரிவான இந்திய அஞ்சல் கட்டண வங்கியில், காலியாக உள்ள 51 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நாளைக்குள் (மார்.21) இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். வயது 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News September 20, 2025

திருப்பத்தூர்: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் உடனே 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 20, 2025

சிறப்பு கல்வி மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறப்பு கல்வி மையத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்‌. அப்போது சிறப்பு கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார்.

News September 20, 2025

திருப்பத்தூர்: போலி தங்க நகை அடகு வைத்து ரூ.1 லட்சம் அபேஸ்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வண்டி தெருவில் உள்ள அடகு கடை ஒன்றில் போலி தங்க செயின் வைத்து 1 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி சென்ற கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பகுதியை சேர்ந்த மாதவன் (வயது 40) என்பவரை கடையின் ஊழியர் நந்தினி கொடுத்த புகாரின் பேரில் இன்று (செப்.20) வாணியம்பாடி நகர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!