News March 20, 2025
நெல்லை அஞ்சலக கூட்டத்தில் குறைதீர் கூட்டம்

நெல்லை அஞ்சலக முதுநிலைக்கோட்ட கண்காணிப்பாளர் முருகன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் மார்ச் 24 அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், திருநெல்வேலி கோட்டத்திற்குட்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 21, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.20] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News April 20, 2025
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வெல்டிங் கட்டுமானப்பணிக்கு 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 25,000 வரை வழங்கப்படுகிறது. ITI படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-21, முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <
News April 20, 2025
நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகளான டானிக் பாட்டில்கள் போன்றவை பொதுக் கழிவுகளுடன் சேர்ந்து எரிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து நேற்று மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் குப்பைகளை முறையாக கையாள வேண்டும், தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றது.