News March 20, 2025
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

அரண்மனைபள்ளம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ், இவரது மனைவி ஆனந்தி. குழந்தை பிறந்ததிலிருந்தே ஆனந்திக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆனந்தி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
Similar News
News September 20, 2025
தர்மபுரி: புரட்டாசி மாத முதல் சனி! இதை மறக்காம பண்ணிருங்க!

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று அசைவ உணவுகளைத் தவிர்த்து, விரதம் இருந்து பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடலாம். வீடுகளிலும் கோயில்களிலும் மாவிளக்கு ஏற்றி, பெருமாளின் நாமங்களை உச்சரித்து வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் செல்வம் செழித்து துன்பங்கள் நீங்கி, நல்லவை நடக்கும் என்பது நம்பிக்கை. தர்மபுரியில் சென்றாயப் பெருமாள் கோயிலில் இன்று வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. ஷேர்!
News September 20, 2025
தர்மபுரி: கல்லூரி மாணவரை விடிய விடிய துன்புறுத்திய 17 பேர் கைது

தர்மபுரி ஒட்டப்பட்டி அரசு அம்பேத்கர் மாணவர் விடுதியில், ஹெட்போன் திருடியதாகக் கூறி ஒரு மாணவரை சக மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஒரு அறையில் பூட்டி வைத்து இரவு முழுவதும் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின் பேரில், 17 மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
News September 20, 2025
தருமபுரியில் நேரடி மாணவர் சேர்க்கை

அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரியில் சான்றிதழ் படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை 22.09.2025 முதல் நடைபெறும்.தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ தகவல். மாணவர் சேர்க்கை செயல்முறைகள் 30.09.2025 அன்று நிறைவுப்பெற்று வகுப்புகள் 06.10.2025 முதல் தொடங்கும். இதற்கான கலந்தாய்வு அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி தருமபுரியில் நடைபெறும். தகவல் தொலைபேசி 04342-233600,7418844106 தொடர்பு கொள்ளலாம்