News March 20, 2025

செங்கல்பட்டின் பெயர் காரணம் தெரியுமா?

image

சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்தது. எனவே,செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது மருவி இப்பொழுது செங்கல்பட்டு என அழைக்கப்படுகிறது. இது செங்கை எனவும் அழைக்கப்படுகிறது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.

Similar News

News September 20, 2025

செங்கல்பட்டு: வெந்நீரில் விழுந்து 3 வயது குழந்தை பலி

image

செய்யூர் அடுத்த சின்னவெண்மணியில், விளையாடும் போது தவறி வெந்நீரில் விழுந்து 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. லட்சுமணன்(33), சத்தியா (28) தம்பதியில் 3 வயது மகளான தீபிகா கடந்த செப்.11ம் தேதி பசுவுக்கு கஞ்சி காய்ச்ச வைக்கப்பட்டு இருந்த வெந்நீரில், தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தை வைத்துள்ளவர்கள் கவனமாக இருங்கள்.

News September 20, 2025

செங்கல்பட்டு: ஆயுத பூஜைக்கு சிறப்பு ரயில்

image

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் செப்.26ந்தேதி முதல் அக். 26ந்தேதி வரை நெல்லை – செங்கல்பட்டு – நெல்லை இடையே வண்டி எண் (06154 & 06153) வாரம் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமையில் பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று செப்.20 காலை 8 மணிக்கு துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்ட நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 20, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் செப்-19 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!