News March 20, 2025
அசிங்கமாக பேசிய Grok.. களமிறங்கிய IT அமைச்சகம்

X AI சாட்போட்டான Grok, பயனர்களின் கேள்விக்கு, ஆபாசமாக பதிலளித்தது குறித்து மத்திய IT அமைச்சகம் விசாரித்து வருகிறது. ஏன் இவ்வாறு நடந்தது என X நிறுவன ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு Grok நீண்ட நேரம் பதிலளிக்காமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், ஹிந்தியில் கொச்சையாக மீண்டும் கேள்வி எழுப்பியதால், அதுவும் கொச்சையாக பதிலளித்தது.
Similar News
News July 8, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு காவலர்களின் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
News July 8, 2025
U19 ODI: இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான U19 ODI போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்தியாவில், அம்பிரீஷ்(66) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் 210 ரன்களை மட்டுமே இந்தியா சேர்த்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்தில், பென் மேயஸ் 82 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆனால் தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றியது.
News July 8, 2025
கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் அதிகமா?

இதே வேகத்தில் போனால், 2050-க்குள் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் அதிகமாக இருக்கும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆம், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் 85 சதவீதம், நிலம் (அ) கடலில் எறியப்படுகிறது. இவை கடலையும், காற்றையும் மாசுப்படுத்துகின்றன. மேலும், மீன்களின் உடலிலும் சேர்வதால், அவற்றை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்களை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கை தவிர்க்கலாமே!