News March 20, 2025
திருப்பூர் சுகாதாரத்துறையில் வேலை!

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 42 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் Staff Nurse, Hospital Worker உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதில் வேலைக்கு ஏற்றார்போல், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு வரும் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கு <
Similar News
News March 28, 2025
+2 மாணவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டு +2 பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில் & வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகளை வழங்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் & ஆலோசனை முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 2 ஆவது தளத்தில் உள்ள அறை எண் 240ல் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 30 காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
News March 28, 2025
குடிநீர் பயன்பாடு தொடர்பாக அதிகாரிகள் அறிவிப்பு

கோடை காலம் முன்னரே திருப்பூரில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
News March 28, 2025
திருப்பூர் மக்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் இயல்பை விட 2-3 டிகிரி கூடுதலாக வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்லாதீங்க. ▶ வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். ▶ தேநீர், காபி, மது (ம) கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.