News March 20, 2025
தேனியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (மாா்ச்.21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 98948 89794 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
தேனி: நெஞ்சுவலியால் ஒருவர் தற்கொலை

கம்பம் மெட்டு பகுதியை சேர்ந்தவர் அசோகன் (65). இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனால் மது அருந்தக்கூடாது என டாக்டர் அறிவுறுத்திய நிலையிலும் அசோகன் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி அதிகரித்துள்ளது. வலி பொறுக்காமல் அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் போலீசார் வழக்கு (நவ.12) பதிவு.
News November 13, 2025
தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<
News November 13, 2025
தேனி: பைக் மீது டிராக்டர் மோதி இருவர் உயிரிழப்பு

தேனியை சேர்ந்தவர் சிவா (25). இவர் அவரது பைக்கில் அவரது நண்பரான அருண் (32) என்பவரை அழைத்து வைத்துக் கொண்டு நேற்று (நவ.12) திண்டுக்கல் குமுளி பைபாஸ் சாலையில் சென்றுள்ளார். கோட்டூர் அருகே பைக் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் டிராக்டர் இவர்களது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.


