News March 20, 2025

மனைவியை கட்டையால் அடித்த கணவர் கைது

image

சங்கராபுரம் அடுத்த கல்லிப்பட்டை சேர்ந்தவர் முரளி(40). இவரது மனைவி மகாலட்சுமி(36). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று மகாலட்சுமி, அவரது உறவினருடன் சங்கராபுரம் சென்றார். அங்கு எதிர்பாராவிதமாக முரளியை சந்தித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. கட்டையால் மகாலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் முரளியை கைது செய்தனர்.

Similar News

News March 21, 2025

நாதகவின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நியமனம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்த மாரியப்பன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமனம் செய்யப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இன்று சீமான் அறிவித்துள்ளார்.

News March 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்கும் லிங்க்

News March 21, 2025

களைக்கொல்லி குடித்தவர் பலி

image

கள்ளக்குறிச்சி அழகாபுரத்தை சேர்ந்தவர் பொன்னுவேல்(38). கடந்த 2 ஆண்டுகளாக நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மார்ச்.17ம் தேதி ‘களைக்கொல்லி’ மருந்தை குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்யில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

error: Content is protected !!