News March 20, 2025
சேலத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலத்தில் நாளை (மார்ச் 21) தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ,பட்டப்படிப்பு, பொறியியல்,செவிலியர், போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News March 21, 2025
சேலம் மாவட்டத்திற்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேலம் கோட்டத்தில் 486 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். இதற்கு மார்ச்.21 முதல் ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். (Share பண்ணுங்க)
News March 21, 2025
அணைமேடு ராஜ முருகன் சிலை மறுசீரமைப்பு பணிகள் நிறைவு

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அணைமேடு பகுதியில் 56 அடி உயரத்தில் கட்டப்பட்ட ராஜ முருகன் சிலையின் முகம் மற்றும் உடலமைப்பு சரி இல்லை என்று பலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், முருகன் சிலை மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது. தற்போது அதன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் கும்பாபிஷேக தேதியும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 21, 2025
சேலம் வழியாக ரம்ஜான் சிறப்பு ரயில்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மார்ச் 28, ஏப்ரல் 04 தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து சாலிமருக்கும், மார்ச் 31, ஏப்ரல் 07 தேதிகளில் சாலிமரில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும் சிறப்பு ரயில்கள் (06081/06082) அறிவிப்பு. இந்த ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.