News March 20, 2025
மனைவியை ஒருமுறை தொட ₹5,000 கேட்பதாக புகார்

ஒருமுறை தொடுவதற்கு ₹5,000 கேட்பதாக, மனைவி மீது கணவன் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த IT ஊழியர் ஸ்ரீகாந்த் – பிந்துஸ்ரீ ஜோடிக்கு கடந்த 2022இல் திருமணம் நடந்துள்ளது. கணவருக்கு பல்வேறு நிபந்தனை விதித்த மனைவி, WFH ஆபீஸ் மீட்டிங்கின் போது லேப்டாப் முன்பு நடனமாடியதால் தனது வேலையே போய்விட்டதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அடக்கடவுளே..!
Similar News
News March 21, 2025
IPLல் 2 பந்து: புதிய விதி அறிமுகம்

IPL போட்டியின் நடப்பு சீசனில் புதிய விதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இரவு நேர ஆட்டங்களில் பந்து ஈரமாகி விடுவதால், 2 ஆவது இன்னிங்ஸில் புதிய பந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 ஆவது ஓவருக்கு பின், நடுவரிடம் முறையிட்டு புதிய பந்து கேட்கலாம். பந்தின் மீது எச்சில் தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது. IMPACT வீரர் விதிமுறை 2 ஆண்டுகளுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 21, 2025
வெயில் காலம் வருது.. இது முக்கியம் மக்களே

வெயில் காலம் ஆரம்பிச்சா வெளியில தலை காட்ட முடியாது. ஆனால் வெளில போகலன்னா பொழப்பு ஓடாது. வெயில் காலத்துல வெப்பத்தின் காரணமாக, உடல் உறுப்புகள் திடீரென்று செயலிழந்து `ஹீட் ஸ்ட்ரோக்’ வரலாம். உடலில் நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல் போன்ற அறிகுறிகளுடன் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பவாத பாதிப்பு ஏற்படும். இதனால் வெயில் நேரத்தில் வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
News March 21, 2025
80 நாள்களில் 113 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் பிஜப்பூர், கான்கெர் மாவட்டங்களில் நடந்த இரு வேறு என்கவுன்ட்டர்களில் 30க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனுடன் சேர்த்து கடந்த 80 நாளில் மட்டும் 113 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிஜப்பூரில் மட்டும் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நக்சல் இல்லாத நாட்டை உருவாக்கும் முயற்சியில் நமது படை வீரர்கள் மகத்தான வெற்றியை பெற்று வருகின்றனர் என அமித் ஷா பாராட்டியுள்ளார்.