News March 20, 2025

திருப்பூரில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

image

திருப்பூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, ஆகியவற்றை செலுத்தக்கூறி, மாநகராட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. மேலும் வார இறுதி நாட்களிலும் வரி வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில் முறையாக வரி செலுத்தாத, 568 வீடுகளில் குடிநீர் இணைப்பு, துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News March 21, 2025

திருப்பூரில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

image

திருப்பூர் செரங்காடு பகுதி சேர்ந்தவர் பிரகாசம், பனியன் நிறுவன தொழிலாளி. இவர் 13 வயது சிறுமிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இந்த வழக்கு விசாரணை  திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பிரகாசத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

News March 20, 2025

குடிமங்கலத்தில் சூதாடிய மூன்று பேர் கைது

image

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் திருப்பூர் மாவட்ட காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது குடிமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த மூன்று நபர்களை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

News March 20, 2025

திருப்பூரில் ரோந்துபணி காவல்துறை அதிகாரிகள் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 20.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அவிநாசி பல்லடம் உடுமலைப்பேட்டை தாராபுரம் காங்கயம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விபரம் பொது மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!