News March 20, 2025

விவசாய நிலத்தை மனையாக மாற்ற அனுமதி இல்லை

image

விவசாய நிலங்களைப் பிரித்து மனைகளாக விற்க அனுமதியில்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், விவசாய நிலத்தைப் பிரித்து வீட்டு மனையிடங்களாக மாற்ற முடியாது என்றார். மேலும், நிலங்களைப் பதிவு செய்வதைப் பொருத்தவரை, கிராம நத்தமாக உள்ள இடங்களைப் பொதுமக்களின் வசதிக்காக எந்த மாற்றமும் இல்லாமல் பதிவு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News March 21, 2025

அமெரிக்காவில் கல்வித் துறையை மூடிய டிரம்ப்

image

அமெரிக்காவில் கல்வித் துறையை மூடுவதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதே நேரம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நிதியுதவி, மானியம் உள்ளிட்ட சலுகைகள் தொடரும் என அவர் அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு மூலம் கல்வித் துறையை நிர்வகிக்கும் பொறுப்பு இனி அந்தந்த மாகாண அரசுகளிடமே ஒப்படைக்கப்படும்.

News March 21, 2025

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் வேல்முருகன்?

image

2021 தேர்தலில் தவாக தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் MLAஆக தேர்வானார். ஆனால், சமீபகாலமாக அவரின் செயல்பாடு மீது திமுகவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் திமுகவில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைப்பேன் என கூறியிருந்த நிலையில், நேற்று திமுக – வேல்முருகன் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதனால், வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் தவாக இருக்காது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News March 21, 2025

தமிழக MPக்கள் சஸ்பெண்ட்? இன்று முடிவு

image

விதிமுறைகளை மீறியதாக திமுக MPக்கள் 10 பேரை இடைநீக்கம் செய்வது தொடர்பாக இன்று முடிவு எடுக்கப்பட உள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பான கண்டன வாசகங்கள் அடங்கிய டீ-சர்ட்டை அணிந்துகொண்டு திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றம் சென்றிருந்தனர். உடை காரணமாக அவைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து மாநிலங்களவைச் செயலகம் இன்று முடிவெடுக்கவுள்ளது.

error: Content is protected !!