News March 20, 2025

‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசி விலை பல மடங்கு அதிகரிப்பு

image

குழந்தைகளுக்கு கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும் ‘Hepatitis B’ தடுப்பூசி விலை பல மடங்கு விலை உயர்ந்துள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். 3 தவணைகளாக செலுத்தப்படும் இது, ஒரு டோஸ் ₹20 – ₹50க்கு விற்கப்பட்டது. திடீரென 3 டோஸ் கிட்டத்தட்ட ₹1,700 வரை விலை உயர்ந்துள்ளதால், நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News

News March 21, 2025

மார்ச் 21: வரலாற்றில் இன்று!

image

*1984 – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கிய இலங்கை அரசு, அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.
*2006 – X (ட்விட்டர்) சமூக வலைதளம் உருவாக்கப்பட்டது.
சிறப்பு நாள்:
உலக பொம்மலாட்ட தினம்.
உலக கவிதைகள் தினம்.
உலக காடுகள் தினம்.
சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம்.

News March 21, 2025

நெதர்லாந்துக்கு இந்தியா கோரிக்கை

image

பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என நெதர்லாந்துக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. PAKக்கு அதிகளவில் கடற்படை சார் தளவாடங்களை நெதர்லாந்து வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி கன்னிவெடி தகர்ப்பு கப்பல்கள், கடலோர ரோந்து கப்பல்களையும் அந்நாடு வழங்குகிறது. மேலும் சீனா, துருக்கிக்கு அடுத்தபடியாக PAKக்கு அதிக ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக நெதர்லாந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 21, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 213
▶குறள்: புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
▶பொருள்: பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ஒப்புரவு என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.

error: Content is protected !!