News March 20, 2025
சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகன்

காவேரிப்பாக்கம் அருகே உள்ள அவளூரை சேர்ந்தவர் விவசாயி முனுசாமி (65).இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர்.முதல் மனைவியின் மகனான விநாயகத்துடன் (45) சொத்து தகராறு நீடித்து வந்தது. நேற்று ஏற்பட்ட வாக்குவாதத்தில், விநாயகம் தந்தையை கட்டையால் தாக்கி உள்ளார்.பலத்த காயமடைந்த முனுசாமி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.அவளூர் போலீசார் வழக்குப்பதிந்து விநாயகத்தை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2025
விவசாயிகள் குறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறித்த கூட்டம் ஏப்ரல் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை கலைக்கூடத்தில் நடைபெறுகிறது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை, வணிகம், வனத்துறை உள்ளிட்ட பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உள்ளனர். விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 20, 2025
ராணிப்பேட்டை மாவட்ட முக்கிய எண்கள்

▶️மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் – 04172-272211
▶️தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணித்துறை – 101
▶️காவல் கட்டுப்பாட்டு அறை – 100
▶️மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை – 1077
▶️காவல் துறை புகார் வாட்ஸ் அப் எண் – 9092700100
▶️பாலியல் வன்கொடுமை தடுப்பு – 1091
▶️குழந்தைகள் உதவி – 1098
▶️தாசில்தார், போளூர் – 9445000517
▶️பி.எஸ்.என்.எல் உதவி – 1500
ஷேர் பண்ணுங்க மக்களே
News April 20, 2025
நெமிலி அருகே நாய் கடித்ததில் 7 பேர் காயம்

நெமிலியை அடுத்த திருமால்பூரில் வெள்ளிக்கிழமை இரவு ஜஸ்வின் (14), கனிஷ் (14), தருண் (15) உள்ளிட்ட பல சிறுவர்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த போது தெரு நாய் கடித்துள்ளது. அதுபோல் வெவ்வேறு இடங்களில் 4 பேரை தெரு நாய் கடித்துள்ளது. இவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நெமிலி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.