News March 20, 2025
ஆண்டுதோறும் உயரும் சென்னையின் கடல் மட்டம்

1993 முதல் 2020 வரை சென்னை பகுதியில் கடல் மட்டம், ஆண்டுக்கு 4.31 மில்லி மீட்டர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்த தகவலை பதிலாக அளித்துள்ளது. இதே காலகட்டத்தில் மும்பையில் 4.59 மி.மீ., கொச்சியில் 4.10 மி.மீ., பாராதீப்-ல் 4.43 மி.மீ., அளவுக்கு கடல் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
Similar News
News March 21, 2025
டேவிட் வார்னர் சாதனையை சமன் செய்வாரா கோலி?

IPL தொடரில் அதிகமுறை ‘ஆரஞ்சு தொப்பி’ வென்ற டேவிட் வார்னர் சாதனையை விராட் கோலி சமன் செய்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2015, 2017, 2019 ஆகிய 3 ஆண்டுகளில் டேவிட் வார்னர் ஆரஞ்சு தொப்பி வென்றுள்ளார். அதேநேரம், 2016, 2024ல் அதிக ரன்களுக்கான ஆரஞ்சு தொப்பியை 2 முறை RCB வீரர் விராட் கோலி வென்றுள்ளார். அத்துடன், IPLல் ஒரு தொடரில் அதிக ரன்கள் (973) அடித்த வீரர் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.
News March 21, 2025
தங்கம் விலை குறைந்தது

கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று மளமளவென்று குறைந்ததால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹66,160க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ₹8,270க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News March 21, 2025
பிரதமரின் வெளிநாட்டு டூருக்கு எவ்வளவு செலவு?

2022 மே முதல் 2024 டிசம்பர் வரை பிரதமர் மோடி 38 முறை வெளிநாடுகளுக்கு பயணித்திருக்கிறார். இதற்காக மத்திய அரசு செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? ₹259 கோடி. தங்குமிட செலவு மட்டும் ₹104 கோடி. இதர செலவுகளுக்கு ₹75.7 கோடியும், போக்குவரத்துக்கு ₹71.1 கோடியும் செலவாகி இருக்கிறது. நாடுகள் வரிசையில் அமெரிக்க பயணத்திற்கு தான் அதிகமாக ₹38.2 கோடி செலவாகியுள்ளதாம்.