News March 20, 2025
காய்கறிகளில் ஒளிந்துள்ள நன்மையின் ரகசியம்!

*பச்சை மிளகாய் – சருமப் பிரச்னைகளை தடுக்கும்.
*கொத்தவரங்காய் – சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
*மொச்சைக்காய் – ரத்த கொதிப்பை குறைக்கும்.
*நூக்கல் – உடல் எடையை குறைக்கும்.
*மாங்காய் – கொழுப்பை குறைக்க உதவும்.
*வாழைக்காய் – சிறுநீரக பாதிப்பை தடுக்கும்.
*சின்ன வெங்காயம் – நோய் தொற்று வராமல் தடுக்கும்.
Similar News
News March 20, 2025
கற்றல் திறனை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்!

காலை உணவுத் திட்டம் குழந்தைகளிடம் கற்றல் திறனை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரித்து உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், குழந்தைகள் பள்ளிகளில் சிறந்து விளங்குவதற்கு சத்தான உணவுகள் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காலை உணவுத் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவு குறைந்திருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
News March 20, 2025
ஔரங்கசீப் சமாதியைச் சுற்றி தடுப்புகள் அமைப்பு

தொடர் வன்முறை காரணமாக ஔரங்கசீப் கல்லறையை தகடுகளை வைத்து தொல்பொருள் துறையினர் மூடியுள்ளனர். ஔரங்கசீப் கல்லறையை அகற்றக்கோரி மகாராஷ்டிராவில் இந்துத்துவ அமைப்புக்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பல இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில், ஔரங்கசீப் கல்லறையை சுற்றி தற்போது காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
News March 20, 2025
குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன்.. ஏப்.1இல் புது திட்டம்

மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு ஏப்.1 முதல் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன் கிடைக்குமாம். இதன் பயனைப் பெற ஏற்கெனவே தேசிய பென்ஷன் திட்டத்தில் இருப்போர், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும், பிறகு தேசிய திட்டத்துக்கு மாற முடியாது எனவும் கூறப்படுகிறது.