News March 20, 2025
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பதவியேற்பு

புதுச்சேரி அரசு குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவரும் பாண்டி வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியருமான சிவா முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் சட்டசபையில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் முதலமைச்சர் அமைச்சர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Similar News
News March 20, 2025
தமிழ்நாட்டில் செய்வதை போல புதுச்சேரியிலும் செய்ய கோரிக்கை

இன்று (20-3-25) சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய நேரு எம்எல்ஏ, தமிழகத்தில், பென்சனர்கள் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெற ரூ.70 கட்டணத்தில் சேவை வழங்கப்படுகிறது. அதை பின்பற்றி புதுச்சேரியிலும் இதை நடைமுறைப்படுத்த அஞ்சல் துறையின் India Post Payments Bank உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி பென்ஷனகளின் சிரமத்தை போக்க வேண்டும் என்றார்.
News March 20, 2025
கேஸ் பயனாளிகள் வங்கி கணக்கில் ரூ.150 ரூ.300

பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் நடுவே, குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் நேற்று பேசும்போது, “தற்போது 2024 அக்டோபர் முதல் ஜனவரி 2025 வரை வாங்கப்பட்ட கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மஞ்சள் நிற அட்டைக்கு ரூ.150 வீதமும், சிகப்பு நிற அட்டைக்கு ரூ.300 வீதமும், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.11.50 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
News March 20, 2025
புதுவை: ஹெல்மெட் அணியாத 37,107 பேருக்கு அபராதம்

சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், ஒவ்வொரு குடிமகனும், பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி அரசு பிரசாரமும் தொடங்கியுள்ளது. இதுவரை புதுவையில் ஹெல்மெட் அணியாத 37,107 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் உச்சநீதிமன்றம் விபத்து மரணத்தை கண்காணித்து கேட்கிறது. இதனால் புதுவையில் மக்கள் அவசியம் தலைகவசம் அணிய வேண்டும் என பதில் அளித்தார்.