News March 20, 2025
2008 முதல் ஐபிஎல் விளையாடும் வீரர்கள் பட்டியல் இதோ!

ஐபிஎல் தொடரில் இதுவரை ஆயிரக்கணக்கான கிரிக்கெட் வீரர்கள் விளையாடியுள்ளனர். ஆனால் தொடக்க சீசனில் இருந்து வரவிருக்கும் சீசனில் ஒரு சிலர் மட்டுமே விளையாட உள்ளனர். அவர்களில், ஸ்வப்னில் சிங், ரஹானே, மனிஷ் பாண்டே, இஷாந்த் சர்மா, ஜடேஜா, அஸ்வின், தோனி, கோலி, ரோஹித் ஆகியோர் இன்னும் விளையாடி வருகின்றனர். இவர்கள் அனைவருமே இந்தியர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.
Similar News
News March 21, 2025
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் வேல்முருகன்?

2021 தேர்தலில் தவாக தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் MLAஆக தேர்வானார். ஆனால், சமீபகாலமாக அவரின் செயல்பாடு மீது திமுகவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் திமுகவில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைப்பேன் என கூறியிருந்த நிலையில், நேற்று திமுக – வேல்முருகன் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதனால், வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் தவாக இருக்காது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 21, 2025
தமிழக MPக்கள் சஸ்பெண்ட்? இன்று முடிவு

விதிமுறைகளை மீறியதாக திமுக MPக்கள் 10 பேரை இடைநீக்கம் செய்வது தொடர்பாக இன்று முடிவு எடுக்கப்பட உள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பான கண்டன வாசகங்கள் அடங்கிய டீ-சர்ட்டை அணிந்துகொண்டு திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றம் சென்றிருந்தனர். உடை காரணமாக அவைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து மாநிலங்களவைச் செயலகம் இன்று முடிவெடுக்கவுள்ளது.
News March 21, 2025
இந்த 5 பழக்கங்கள்: வீட்டில் பணம் தங்கவே தங்காது

வீட்டில் பணம் தங்காததற்கு, நாம் கடைப்பிடிக்கும் சில பழக்கங்களே காரணம் என்கிறது வாஸ்து சாஸ்திரம். 1) வீட்டில் பிளாஸ்டிக் டப்பாவில் உப்பு வைக்கக் கூடாது; கண்ணாடி ஜாடியில்தான் வைக்க வேண்டும். 2) கடவுளுக்கு உணவு படைப்பதற்கு முன்பு அதை ருசிக்கக் கூடாது. 3) மாலையில் விளக்கேற்றவே கூடாது. 4) இரவு முழுவதும் எச்சில் தட்டுகள் கழுவப்படாமல் இருக்கக் கூடாது. 5) பால், தயிரை இரவில் திறந்து வைக்கக் கூடாது.