News March 20, 2025
இந்தியா வரும் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விரைவில் இந்தியா வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிய நிலையில், இதை அவரது மூதாதையர் கிராமமான ஜூலாசனில் உறவினர்கள் கொண்டாடினர். சுனிதாவின் சகோதரியான ஃபால்குனி பாண்ட்யா, இந்தியாவுக்கு அவரின் வருகையை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 20, 2025
இசைஞானியை வாழ்த்திய இயக்குனர்கள்!

லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடியும், இளையராஜாவை அழைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பதாக பாராட்டினார். நாடாளுமன்றத்திலும் அவருக்கு புகழ் சூட்டப்பட்டது. இந்நிலையில் இயக்குனர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் இளையராஜாவை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து கூறினர்.
News March 20, 2025
புகார்கள் அதிகரிப்பு: RBI அதிருப்தி

வங்கிகள் மீது புகார்கள் அதிகரித்து வருவதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார். வங்கி சேவைகள் குறித்து சமூகவலைதளங்களில் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை புகாராக பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வங்கி அதிகாரிகள், நிர்வாகத்தினர் நினைத்தால் இதற்கு எளிதாகத் தீர்வு காண முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
News March 20, 2025
GBU வில்லன் இவரா?

‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ரகுராம் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தில், வில்லன் கும்பலைச் சேர்ந்த இரட்டையர்களில் ஒருவராக ரகுராம் நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் மெட்ரோ சண்டை காட்சியில் மாஸ் காட்டியிருப்பார். டெல்லியில் பிறந்த இவர் இந்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.