News March 20, 2025
2 மாநிலங்களில் அமைந்துள்ள ஒரே மாவட்டம் எது தெரியுமா?

இந்தியாவில் உள்ள தனித்துவமான முக்கிய அம்சங்களில், சித்ராகூட் எனும் மாவட்டம் 2 மாநிலங்களில் அமைந்திருப்பதும் ஒன்று. இந்த மாவட்டத்தின் பெரும் பகுதி உ.பி.யிலும், சிறிய பகுதி மட்டும் ம.பி.யிலும் உள்ளன. சட்டம், நிர்வாகம், நிர்வாகத்தை 2 மாநிலங்களுமே கவனிக்கின்றன. தற்போது 2 மாநிலங்களிலும் பாஜக அரசு உள்ளதால், நிர்வாகத்தில் குழப்பம் இல்லை. வனவாசத்தின்போது இந்த மாவட்டத்தில் ராமர் இருந்ததாக கூறப்படுகிறது.
Similar News
News March 20, 2025
மதுக்கடைகளில் இனி பெண்களும் பணியாற்றலாம்…!

மதுக்கடைகளில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது மேற்குவங்க மாநிலம். 1909ம் ஆண்டு வங்க கலால் சட்டத்தை திருத்தி மேற்குவங்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம், மதுக்கடைகள், மதுபான பார்களில் இனி பெண்களும் பணியாற்றலாம். பாலின பாகுபாட்டை களையும் நோக்கில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதாக அமைச்சர் சந்திரிமா தெரிவித்துள்ளார்.
News March 20, 2025
வங்கி சேவைகள் 4 நாள்கள் முடங்கும் அபாயம்!

வாரத்தில் 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கு முந்தைய 2 நாள்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையாக உள்ளன. இதனால், 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளது. அதனால், பொதுமக்கள் தங்களது வங்கி பணியை வரும் 22ம் தேதியே முடித்துக் கொள்வது நல்லது.
News March 20, 2025
SHARE MARKET-ல் க்ரீன் சிக்னல்… ரூபாய் மதிப்பும் உயர்வு!

தொடர் வீழ்ச்சியில் இருந்த இந்திய பங்குச் சந்தைகள், 4வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 899 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ், பிப்ரவரிக்கு பிறகு முதல்முறையாக 76,348 புள்ளிகளை தொட்டது. இதேபோல், நிப்ஃடி 283 புள்ளிகள் உயர்ந்து 23,190 புள்ளிகளில் வர்த்தகமானது. மேலும், டாலருக்கு நிகராக ரூபாயில் மதிப்பு 1 பைசா உயர்ந்து ரூ.86.46 ஆக உள்ளது.