News March 20, 2025
சுவிஸ் ஓபனில் கலக்கிய ஸ்ரீகாந்த் கிடாம்பி

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே அசத்திய ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் 2வது சுற்றில் ஸ்ரீகாந்த் சீன வீரர் லீ ஷிபெங் உடன் மோதுகிறார்.
Similar News
News March 20, 2025
தரைவழித் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ளன. மத்திய மற்றும் தெற்கு காசாவை இரண்டாக பிரித்து தங்களது கண்ட்ரோலில் கொண்டு வர இஸ்ரேல் ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது தரைவழித் தாக்குதலையும் முடுக்கிவிட்டுள்ளது. ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவிக்காததால், தாக்குதலை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.
News March 20, 2025
ஒரே நாளில் 4 கொலைகள்: பேரவையில் இபிஎஸ் ஆவேசம்

TNல் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக சட்டப்பேரவையில் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். கொலை நடப்பது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும், காவல்துறை செயலற்றதாகிவிட்டதாகவும் அவர் சாடினார். குடும்பத் தகராறு, முன்விரோதம் காரணமாகவே கொலைகள் நடந்ததாக CM ஸ்டாலின் விளக்கம் அளித்த நிலையில், இருவருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
News March 20, 2025
பிரபல பாம்பு பிடி வீரர் சந்தோஷ் மரணம்

கோவையை சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரரான சந்தோஷ் (39) நாகப்பாம்பு கடித்ததில் உயிரிழந்தார். கடந்த 15 ஆண்டுகளாக பாம்பு பிடி தொழில் செய்து வந்த அவரை, Snake Santhosh என பலரும் அழைப்பர். குடியிருப்புப் பகுதியில் நுழைந்த பல்லாயிரக்கணக்கான பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து வனத்துறை உதவியுடன் வனப்பகுதியில் விட்டவர். கொங்கு மண்டலத்தில் பிரபலமான சந்தோஷின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.