News March 20, 2025
தினமும் அரிசி சாதம் சாப்பிடுறீங்களா… இத கவனிங்க

பெரும்பாலானோர் தினமும் வெள்ளை அரிசி சாதத்தையே சாப்பிடுகிறார்கள். ஆனால், வெள்ளை சாதத்தை விட ப்ரவுன் அரிசியில் (பழுப்பு அரிசி) சமைக்கப்படும் சாதம் உடலுக்கு மிகவும் நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். இதில் நார்ச்சத்து, வைட்டமின், மினரல்கள் அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நார்ச்சத்து இருப்பதால் உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும், சர்க்கரையையும் குறைக்கிறது.
Similar News
News March 20, 2025
புகார்கள் அதிகரிப்பு: RBI அதிருப்தி

வங்கிகள் மீது புகார்கள் அதிகரித்து வருவதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார். வங்கி சேவைகள் குறித்து சமூகவலைதளங்களில் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை புகாராக பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வங்கி அதிகாரிகள், நிர்வாகத்தினர் நினைத்தால் இதற்கு எளிதாகத் தீர்வு காண முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
News March 20, 2025
GBU வில்லன் இவரா?

‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ரகுராம் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தில், வில்லன் கும்பலைச் சேர்ந்த இரட்டையர்களில் ஒருவராக ரகுராம் நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் மெட்ரோ சண்டை காட்சியில் மாஸ் காட்டியிருப்பார். டெல்லியில் பிறந்த இவர் இந்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
News March 20, 2025
அசிங்கமாக பேசிய Grok.. களமிறங்கிய IT அமைச்சகம்

X AI சாட்போட்டான Grok, பயனர்களின் கேள்விக்கு, ஆபாசமாக பதிலளித்தது குறித்து மத்திய IT அமைச்சகம் விசாரித்து வருகிறது. ஏன் இவ்வாறு நடந்தது என X நிறுவன ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு Grok நீண்ட நேரம் பதிலளிக்காமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், ஹிந்தியில் கொச்சையாக மீண்டும் கேள்வி எழுப்பியதால், அதுவும் கொச்சையாக பதிலளித்தது.