News March 20, 2025
பணம் கொட்டணுமா..? பர்ஸில் இதை வைங்க!

பர்ஸில் சில பொருட்களை வைத்திருப்பதன் மூலம் பணம் கொட்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. 1) லட்சுமி குபேர எந்திரத்தை மஞ்சள் துணியில் சுற்றி பர்ஸில் வைக்க வேண்டும். 2) அட்சதையை வைக்க வேண்டும். 3) கோமதி சக்கரத்தை வைக்கலாம். 4) வெள்ளி நாணயத்தை பச்சை பாலில் சில நிமிடம் வைத்திருந்து, அதனை சுத்தமான துணியால் துடைத்து மஞ்சள், குங்குமம் இட்டு வைக்கலாம். 5) தாமரை விதையை வைக்கலாம்.
Similar News
News July 7, 2025
நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.
News July 7, 2025
தொண்டர்கள் வெள்ளத்தில் இபிஎஸ் ரோடு ஷோ

மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்.. என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய இபிஎஸ் மேட்டுப்பாளையத்தில் ரோடு ஷோ மேற்கொண்டார். சுற்றுப்பயணத்திற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் சென்ற அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோவில் பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News July 7, 2025
26/11 தாக்குதல்: பாக்., தொடர்பு உறுதியானது

26/11 தாக்குதலில் பாக்.,க்கு நேரடி தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது. ராணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பையில் தாக்குதலின் போது, தான் அங்கு இருந்ததையும், இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் பாக்.,க்கு நீண்டகாலமாக தொடர்பிருப்பதையும், குறிப்பாக, 26/11 தாக்குதலில் பாக். தொடர்பையும் அவர் உறுதிச் செய்துள்ளார். இந்த விசாரணைக்காக அமெரிக்கா அண்மையில் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.