News March 19, 2025
பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைக்கிறீங்களா… எச்சரிக்கை!

செல்போன் வெடித்து ஒருவருக்கு ஆணுறுப்பே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ம.பி.,யில் மார்க்கெட் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்த இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் திடீரென வெடித்தது. இதில் அவரின் ஆணுறுப்பு சேதம் அடைந்ததுடன், கீழே விழுந்ததால் தலையிலும் காயமடைந்தார். செகன்ட் ஹேண்ட் போனை இரவு முழுவதும் சார்ஜ் போட்டதே இதற்கு காரணம் என்கின்றனர். ஓவர் சார்ஜ் போடாதீங்க BROTHERS!
Similar News
News March 20, 2025
குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன்.. ஏப்.1இல் புது திட்டம்

மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு ஏப்.1 முதல் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன் கிடைக்குமாம். இதன் பயனைப் பெற ஏற்கெனவே தேசிய பென்ஷன் திட்டத்தில் இருப்போர், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும், பிறகு தேசிய திட்டத்துக்கு மாற முடியாது எனவும் கூறப்படுகிறது.
News March 20, 2025
UPS பென்ஷன் திட்டம்: முக்கிய அம்சங்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) மூலம் ஓய்வுபெற்ற ஊழியர்கள், தாங்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% தொகையை பென்ஷனாக பெறலாம். இதற்கு 25 ஆண்டுகள் பணியாற்றி இருப்பது அவசியம். 10 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்தாலும் அவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10,000 பென்சன் கிடைக்கும். பணியின்போது ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு 60% ஊதியம் பென்சனாக கிடைக்க UPS வகை செய்கிறது.
News March 20, 2025
இரட்டை நாக்கு ஏன்? எ.வ.வேலு கோபம்

தருமபுரியில் சிப்காட் அமைக்க வேண்டும் என்ற பாமக MLA ஜி.கே மணியின் கோரிக்கைக்கு, அமைச்சர் எ.வ.வேலு காட்டமாக பதிலளித்துள்ளார். திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க அரசு தயாராக இருந்தும், அந்த பணிகளை மேற்கொள்ள விடாமல் போராட்டம் என்ற பெயரில் பாமக தடுத்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், தற்போது தருமபுரியில் சிப்காட் அமைக்க கேட்பது பாமகவின் இரட்டை நாக்கை காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார்.