News March 19, 2025
தீராத நோய்களைத் தீர்க்கும் வீரராகவப் பெருமாள்

திருவள்ளூர் நகருக்கே பெருமை சேர்க்கும் விதமாக, புகழ் கூட்டும் விதத்தில் எழுந்தருளியிருக்கிறார் வீரராகவ பெருமாள். சிவபெருமான் இத்தலத்து பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் 9 கரைகளுடன் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News March 20, 2025
பைக்கில் புடவை சிக்கி பெண் உயிரிழப்பு

திருவாலங்காடு அருகே, ஜெகதீசன் மனைவி அருணாவுடன் மகளை சந்திக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பி வரும்பொழுது, அருணாவின் புடவை இருசக்கர வாகன சக்கரத்தில் சிக்கி, வாகனம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படுகாயமடைந்த அருணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 19, 2025
ஒன்றரை வயது குழந்தையை கடித்த வெறிநாய்

திருத்தணி அருகே வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை வெறி நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கு மேல் சிகிச்சைக்காக ரூ. 4 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கூலி வேலை செய்து வரும் அக்குழந்தையின் தந்தை பழனி செய்வதறியாமல் தவித்து வருகிறார்.
News March 19, 2025
8th Pass செய்திருந்தால் போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை…

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் கிடையாது.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த <