News March 19, 2025
நண்பேன்டா.. IPLஇல் அம்பயர் யாரு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் சிறுவயது நண்பர் தன்மாய் ஸ்ரீவஸ்தவா (46), இந்த IPLஇல் நடுவராக களமிறங்கவுள்ளார். கோலியும், ஸ்ரீவஸ்தவாவும் 2008இல் நடந்த UNDER 19 உலகக்கோப்பை போட்டியில் விளையாடியுள்ளனர். இப்போட்டியில் அதிக ஸ்கோர் எடுத்தவரே ஸ்ரீவஸ்தவாதான். ஆரம்பக்கால IPLஇல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர், பிறகு அம்பயரிங் ஃபீல்டை தேர்ந்தெடுத்தார்.
Similar News
News March 20, 2025
இந்த இரண்டுமே தனித்தனி தான்: ஷுப்மன் கில்

கேப்டன் பொறுப்பையும், பேட்டிங் செய்வதையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். களத்திற்கு வெளியே கேப்டன் பொறுப்பு குறித்து அதிகமாக சிந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பேட்டிங் செய்யும் போது அதில் மட்டுமே கவனம் செலுத்துவது சிறந்ததாக அமையும் என்றார். நடப்பு ஐபிஎல் சீசனில், குஜராத் அணியை ஷுப்மன் கில் வழிநடத்துவது குறிப்பிடத்தக்கது.
News March 20, 2025
மார்ச் 20: வரலாற்றில் இன்று!

*1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது பொதுச்சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
*1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது.
*1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.
*2015 – வலய மறைப்பு, சம இரவு நாள், பெருமுழுநிலவு அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்தன.
*உலக சிட்டுக்குருவிகள் தினம்
*சர்வதேச மகிழ்ச்சி தினம் *உலக ஜோதிட தினம்.
News March 20, 2025
மணிப்பூர் செல்லும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் உள்பட 6 பேர், வரும் 22ஆம் தேதி மணிப்பூர் செல்ல உள்ளதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்போது, வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர்கள் சந்திக்கின்றனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை சூழல் நிலவுகிறது. மெய்தி – குகி இன மக்களுக்கு இடையிலான இடஒதுக்கீடு பிரச்னை வன்முறைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.