News March 19, 2025
ED விசாரணைக்கு தடை கோரிய டாஸ்மாக்

ED நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஐகோர்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டாஸ்மாக் விவகாரத்தில் ED விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், சோதனையில் டாஸ்மாக் ஆவணங்களை பறிமுதல் செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனைக்கு பின், ₹1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக ED தெரிவித்தது.
Similar News
News March 20, 2025
காய்கறிகளில் ஒளிந்துள்ள நன்மையின் ரகசியம்!

*பச்சை மிளகாய் – சருமப் பிரச்னைகளை தடுக்கும்.
*கொத்தவரங்காய் – சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
*மொச்சைக்காய் – ரத்த கொதிப்பை குறைக்கும்.
*நூக்கல் – உடல் எடையை குறைக்கும்.
*மாங்காய் – கொழுப்பை குறைக்க உதவும்.
*வாழைக்காய் – சிறுநீரக பாதிப்பை தடுக்கும்.
*சின்ன வெங்காயம் – நோய் தொற்று வராமல் தடுக்கும்.
News March 20, 2025
இந்த இரண்டுமே தனித்தனி தான்: ஷுப்மன் கில்

கேப்டன் பொறுப்பையும், பேட்டிங் செய்வதையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். களத்திற்கு வெளியே கேப்டன் பொறுப்பு குறித்து அதிகமாக சிந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பேட்டிங் செய்யும் போது அதில் மட்டுமே கவனம் செலுத்துவது சிறந்ததாக அமையும் என்றார். நடப்பு ஐபிஎல் சீசனில், குஜராத் அணியை ஷுப்மன் கில் வழிநடத்துவது குறிப்பிடத்தக்கது.
News March 20, 2025
மார்ச் 20: வரலாற்றில் இன்று!

*1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது பொதுச்சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
*1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது.
*1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.
*2015 – வலய மறைப்பு, சம இரவு நாள், பெருமுழுநிலவு அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்தன.
*உலக சிட்டுக்குருவிகள் தினம்
*சர்வதேச மகிழ்ச்சி தினம் *உலக ஜோதிட தினம்.