News March 19, 2025
ரயில்களில் எவற்றை கொண்டு செல்லக் கூடாது?

ரயிலில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல 1989 ரயில்வே சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், ஸ்டவ், தீப்பெட்டி, லைட்டர், பட்டாசு ஆகியவை அடங்கும். தடையை மீறி இவற்றை ரயில்களில் கொண்டு சென்றால், ரூ.1,000 அபராதம் (அ) 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சேதம், உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கும் அவரே பொறுப்பாவார். SHARE IT.
Similar News
News March 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 212
▶குறள்: தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
▶பொருள்: தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
News March 20, 2025
இன்றைய (மார்ச் 20) நல்ல நேரம்

▶மார்ச் – 20 ▶பங்குனி – 06 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM- 10:30 AM ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News March 20, 2025
”ஈ சாலா கப் நம்தே” மனம் திறந்த டிவில்லியர்ஸ்

”ஈ சாலா கப் நம்தே” எனக் கூறுவதை தயவுசெய்து நிறுத்த வேண்டும் என விராட் தன்னிடம் கூறியதாக AB டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோலி அனுப்பிய மெசேஜை பகிர்ந்துள்ள அவர், இது விராட்டிடம் இருந்து தனக்கு நேரடியாக வந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், நடப்பு IPL சீசனில் NO 18 ஜெர்சி அணியும் வீரர் இருக்கிறார்; RCB கோப்பையை வென்றால், கோலியுடன் சேர்ந்து நானும் கொண்டாடுவேன் எனவும் கூறியுள்ளார்