News March 19, 2025
ISRO: கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி

நெல்லை, மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி அடைந்துள்ளது. GSLV LVM3 ராக்கெட்டுக்கான CE20 கிரையோஜெனிக் E15 இன்ஜினின் சோதனை இங்கு பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. அதன்படி 100 விநாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுன்ட் டவுன் ஆரம்பிக்கப்பட்டு, சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Similar News
News July 9, 2025
பட்டாசு ஆலைகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விதிமீறல்கள் நடந்திருப்பது உறுதியானால் ஆலைகளை மூடுவது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட விபத்து நடக்கக் கூடாது என திட்டவட்டமாக ஆணையம் தெரிவித்துள்ளது.
News July 9, 2025
பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர்

அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 21-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்ட அறிவிப்பில், வரும் 31-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 4 முதல் 9-ம் தேதி வரை மாணவர்கள், கல்லூரியைத் தேர்வு செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News July 9, 2025
இந்திய கடற்படையில் 1,040 காலியிடங்கள்

இந்திய கடற்படையின் பல்வேறு துறைகளில் உள்ள Group-B மற்றும் C பதவிகளில் 1,040 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இந்த மாதம் 18-ம் தேதி கடைசி நாளாகும். SC, ST, PH மற்றும் பெண்கள் தவிர்த்து மற்றவர்கள் ₹295 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு அடிப்படையில் ஆள்தேர்வு நடைபெறும். முழு விவரங்களுக்கு இங்கே <