News March 19, 2025
7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நாளை, நாளை மறுநாள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. 22, 23ஆம் தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், 24, 25ஆம் தேதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் IMD குறிப்பிட்டுள்ளது.
Similar News
News March 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 212
▶குறள்: தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
▶பொருள்: தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.
News March 20, 2025
இன்றைய (மார்ச் 20) நல்ல நேரம்

▶மார்ச் – 20 ▶பங்குனி – 06 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM- 10:30 AM ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News March 20, 2025
”ஈ சாலா கப் நம்தே” மனம் திறந்த டிவில்லியர்ஸ்

”ஈ சாலா கப் நம்தே” எனக் கூறுவதை தயவுசெய்து நிறுத்த வேண்டும் என விராட் தன்னிடம் கூறியதாக AB டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோலி அனுப்பிய மெசேஜை பகிர்ந்துள்ள அவர், இது விராட்டிடம் இருந்து தனக்கு நேரடியாக வந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், நடப்பு IPL சீசனில் NO 18 ஜெர்சி அணியும் வீரர் இருக்கிறார்; RCB கோப்பையை வென்றால், கோலியுடன் சேர்ந்து நானும் கொண்டாடுவேன் எனவும் கூறியுள்ளார்